தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியில், ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு பதிலாக, மும்பையை சேர்ந்த 17 வயது பேட்ஸ்மேன் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முழங்கை காயம் என கூறி ஐபிஎல் தொடரில் இருந்து கெய்க்வாட் வெளியேறிய நிலையில், அணியின் தலைவராக மீண்டும் தோனி வந்துள்ளார். ஆனால், நிலையான ஜோடி இல்லாமல் தொடர்ந்து சிஎஸ்கே அணி தோல்விகளை சந்தித்து வருகிறது. இதை அடுத்து அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில் மும்பையை சேர்ந்த 17 வயதான பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே((Ayush Mhatre)) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் . ஆனால் இன்று லக்னோவில் நடக்கும் ஆட்டத்தில் அவர் இடம் பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.