மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களுக்கும் இங்கிலாந்து 669 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் நிதானமாக விளையாடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது.