இங்கிலாந்திற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்ந்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் 311 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 137 ரன்கள் இந்திய அணி பின் தங்கியுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், இன்னிங்சிஸ் தோல்வியை தவிர்க்கவும் போட்டியை டிரா செய்யவும் இந்திய அணி போராடி வருகிறது.