இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின், 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து தடுமாறியது. முதல் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, 2-ம் நாள் ஆட்டத்தின்போது, 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 129 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். அதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 31 ரன்களும், டெவின் இம்லாக் 14 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையும் படியுங்கள் : புரோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி