வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் 2வது போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது.இதையும் படியுங்கள் : மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்