உலக சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன், வரும் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இம்முறை இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் மீண்டும் களமிறங்கவுள்ளார். இந்தியா சாம்பியன்ஸ் அணி ஜூலை 20 அன்று பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக ஆடுகிறது. யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியில், ஷிகர் தவான், ராயுடு, யூசுப் பதான், போன்றோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.