2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட், ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார். ஒருவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தாலும் அல்லது எவ்வளவு சிறந்த வீரராக இருந்தாலும், தொடர்ச்சியாக விளையாடவில்லை என்றால் கடினம் எனக் கூறினார். ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவதை எடுத்துக்காட்டாக கூறிய அவர், இந்திய அணிக்காக விளையாடும் போது இருந்த தோனிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடி வரும் தோனிக்கும் வித்தியாசத்தை பார்க்க முடியும் என தெரிவித்தார்.