ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், அடுத்த மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே அணியில் தக்கவைத்துக்கொள்ளும் 6 வீரர்களின் விபரங்களை அறிவிக்க அக்டோபர் 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டதுள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் விராட் கோலி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2021 ஐபிஎல்-ல் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, மீண்டும் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.