11வது ப்ரோ கபடி லீக் தொடர் ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதனையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் dabang delhi - u mumba அணிகள் விளையாடவுள்ளன. டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 22 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவுள்ளன.