மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.