சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே, தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழ்நாட்டு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் ஆண்டுதோறும் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த விழாவில், விருந்தினராக கலந்து கொண்ட துபே, ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கினார்.