சபரிமலை ஐயப்பன் கோவிலில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் 7 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16 தேதி நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், நடைப்பந்தல், 18ஆம் படி சரங்குத்தி பகுதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்தனர். நெரிசலை தவிர்ப்பதற்காக பக்தர்கள் நிறுத்தி வைத்து அனுப்பப்படுவதால் சாமி தரிசனத்திற்கு கால தாமதம் ஆவதாக தெரிவித்துள்ள தேவசம்போர்டு, மண்டல பூஜை காலங்களில் கணக்கில் அடங்காத பக்தர்கள் சபரிமலைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.