உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், 161அடி உயர கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இது, 4 மாதங்களில் நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் கோவில் வளாகத்தில் ஏழு முனிவர்களுக்கு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது.