மாதாந்திர சிறப்பு பூஜைக்காக கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டு ஜூன் 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு, கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்தார். இதனையடுத்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.