சித்திரை கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமையை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே மலைக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபாடு செய்தனர்.