சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், எல்லை காவல் தெய்வத்துக்கு கறிச்சோறு மற்றும் அசைவ விருந்து படைத்து கிராம மக்கள் வழிபட்டனர். மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் தங்களது வீடுகளில் சமைத்த அசைவ உணவுகளை ஊர்வலமாக மண் சட்டிகளில் எடுத்துச் சென்று எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைத்தனர்.