அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழுவூரில் உள்ள மகா காளியம்மன் கோயிலில் அம்மன் திருநடன உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மகாகாளியம்மன் திருநடன உற்சவ விழா, கடந்த 3ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாணவேடிக்கை, மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வீதி உலா வந்த மாகாளியம்மனை திரளான மக்கள் தரிசித்தனர்.