ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோவிலில் டிராகன் பட நாயகி கயாடு லோஹர் சாமி தரிசனம் செய்தார். டிராகன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கயாடு லோஹர் காளஹஸ்தி சிவன் கோவிலிக்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கயாடு லோஹர், தான் முதன்முதலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு வந்துள்ளதாகவும், இங்கு வந்தது தனக்கு மகிழ்ச்சியாகவும், தெய்வீக அனுபவமாகவும் இருந்ததாக தெரிவித்தார்.