தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலின் புரட்டாசி மாத தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலின் புரட்டாசி தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய கல்யாண வெங்கட்ரமண சுவாமி தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.