திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் நவராத்திரி விழாவில் பங்கேற்க செல்லும் சுவாமி விக்ரகங்களை இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நடக்கும் 10 நாட்கள் நவராத்திரி விழாவிற்கு சுதீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்பநாபபுரம் அரண்மனை சரஸ்வதி அம்மன் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இந்தாண்டு வரும் 3ம் தேதி திருவந்தபுரத்தில் நவராத்திரி விழா தொடங்குவதையொட்டி சுவாமிகளின் புறப்பாடு நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.