திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கோயில் வளாகம், முக்கிய வீதிகள் என அனைத்து பகுதிகளும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.