சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த பொது தீட்சிதர்கள், தாங்கள் கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி காட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கு ஒன்று நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.