திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விஜயதசமியை ஒட்டி சனிக்கிழமை அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து காலை முதலே ஏராளமானோர் கோவிலுக்கு வருகை தந்தனர். கூட்டம் அதிகமானதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுச் சென்றனர்.