புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.