விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் குவிந்தனர். கடந்த 30 ஆம் தேதிமுதல் இன்று வரையிலும், நவராத்திரி திருவிழாவிற்கு 9 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.