திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி, கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா சென்றார். பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளையொட்டி, மகாவிஷ்ணு அலங்காரத்தில் மலையப்பசுவாமி் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து, கஜ வாகனத்தில் பெருமாள் அமர்ந்து நான்கு மாட வீதியில் உலா சென்றதை , திரளான பக்தர்கள் கோவிந்த நாமம் முழக்கமிட்டும். கற்புரத்தில் ஆரத்தி எடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.