திருமலை திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி 8-வது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வந்த போது திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.