திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் விழாவில் மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 6 ஆம் நாள் விழா நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சுவாமி தங்க அனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வர பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.