கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கம்பளியாம்பட்டியில் உள்ள பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாடுகள் மாலை தாண்டி செல்லும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. கோள கம்பளி மந்த நாயக்கர் சமூகத்தினர் கையில் கம்புகளை வைத்துக்கொண்டு ஏராளமான மாடுகளை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு சென்று வழிபாடு நடத்தினர்.