தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் திருவிழாவில் ஆவணி தபசு காட்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. தெற்கு ரத வீதியில் உள்ள தபசு பந்தலில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, முகலிங்கநாதராக ஒப்பனை அம்பாளுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.