ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே அஞ்சுகோட்டை ஆண்முத்து கருப்பர் மற்றும் அழகிய நாயகி அம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்முத்து கருப்பர் மற்றும் அழகிய நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் 8ஆம் நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கோயில் முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.