மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற விரும்புவதாக தங்கள் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.