பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் எந்தவித அமலாக்கத்துறை சோதனையோ? வருமானவரித்துறை சோதனையோ? நடைபெறாதது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.