முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதற்கான பின்னணி காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் 2016 வரையிலான காலக் கட்டத்தில் அதிமுக அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத் துறைவழக்குப் பதிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறையும் சோதனை நடத்தி வருகிறது.