ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தில் பிறந்தவர்களை போற்றத் தெரிந்த தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டில் பிறந்து சமூக நீதிக்காக போராடிய ஆனைமுத்து, புலவர் கலிய பெருமாள் உள்ளிட்டோரை மறந்தது ஏன் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புலவர் கு.கலியபெருமாள், வே.ஆனைமுத்து ஆகியோரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சள் நகர் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வேல்முருகன், வன்னிக்காடு, சந்தன காடுகளுக்கு வரலாறு இருப்பது போல் முந்திரி காட்டுக்கும் வரலாறு உள்ளதாக கூறினார்.இதையும் படியுங்கள் : இ.பி.எஸ்ஸை அதிமுகவினரே தூற்றுகின்றனர் - சேகர்பாபு..