திருப்புவனம் லாக்கப் மரணத்திற்கு பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இளைஞர் அஜித்குமாரின் தலை முதல் கால் வரை 18 காயங்கள் இருந்த நிலையில், கழுத்து பகுதியில் கொடுக்கப்பட்ட அழுத்ததால் உயிரிழப்பு நேர்ந்ததாக சொல்லப்படுவது அதிர்ச்சியளிப்பதாகவும், இது முழுக்க முழுக்க திமுக அரசின் அராஜகத்தால் நடந்த கொலை என சாடினார். திமுக ஆட்சியில் நடந்த 25 லாக்கப் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்ற அவர் இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.