தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்தது கொள்கை அல்ல, அழுகிய கூமுட்டை என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், விஜய்க்கு திராவிடம் பற்றியும் தெரியாது தமிழ்த்தேசியத்தை பற்றியும் தெரியாது என கடுமையாக சாடினார்.