அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார். பாஜக கூட்டணிக்கு வரும் பெரிய கட்சி எது என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என்றவர், அதிகமான கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரும் என்று கூறினார். தமிழகத்தில் பாஜக பலமில்லாத கட்சி என கூறும் திமுக, தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என நயினார் நாகேந்திரன் சவால் விடுத்தார்.