திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் ஆகிய இரட்டைக் குழல் துப்பாக்கியோடு 3வது குழலாக என்றைக்கும் விசிக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், எந்தவொரு கூட்டணியும் தேர்தலுக்குப் பின் சிதறிப் போகும், ஆனால் இன்றும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.