மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து பத்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். கங்காபூர், பத்நாபூர் உள்ளிட்ட பத்து இடங்களில் விசிக போட்டியிட உள்ளது.