வணிக வரித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்புவதற்கு தமிழக அரசு மறுப்பதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். வணிக வரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதுடன், அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தொடங்கி முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாவட்ட அளவிலான கல்வி கட்டமைப்பில் நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.