மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.மக்களவை தேர்தலின்போது, பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி உள்ளிட்ட 2 பேர் தன்னிடம் ரூ.2 கோடி வாங்கியதாகவும், தனது கணவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் ஜே.டி.எஸ். முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.