47 ஆவது பிறந்தநாளையொட்டி தந்தையும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் -தாய் துர்கா ஆகியோரிடம் துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார்.அப்போது, முதலமைச்சர், உதயநிதியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார், மணியம்மையார் நினைவிடங்களிலும் மரியாதை செலுத்திய அவர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்திய உதயநிதி, பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.