பாமகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் தமக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கம் போல் வியாழக்கிழமையன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா, இல்லையா என்பதை நிர்வாகக்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்றார். மேலும் கூட்டணி குறித்து தற்போது பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று அவர் விளக்கம் கொடுத்தார்.