முதியவர் மீது காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்காகவா? அல்லது அடித்து உதைத்து விரட்டுவதற்காகவா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினாவினார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கி 50 நாட்களாகியும் இதுவரை ஒருவருக்கு கூட உரிமைத்தொகை வழங்கப்படாதது, திட்டம் அப்பட்டமாக படுதோல்வி அடைந்ததற்கு சான்று என குற்றம்சாட்டினார். மேலும், மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததை குறித்து எவரேனும் கேள்வி எழுப்பினால், பதிலளிக்க வேண்டிய அதிகாரிகள் தங்களது கடமையை செய்யாமல் அடித்து விரட்டியடிப்பதாக தெரிவித்தார்.