சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சாபம் விட்டுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தலைவர் சனாதன தர்மம் வைரஸ் போன்றது என்றும், அதை அழிக்க வேண்டும் என்று பேசியதாக குறிப்பிட்டார். அவ்வாறு பேசுபவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவித்து கொள்வதாக கூறிய அவர், சனாதன தர்மத்தை உங்களால் அளிக்க இயலாது என்றும், ஆனால் நீங்கள் அழிந்து போவீர்கள் என பவன் கல்யாண் சாபம் விடுத்தார்.