மகாராஷ்டிரா மாநிலம் தாராவி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதி கெய்க்வாட்டை ஆதரித்து, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திறந்தவெளி ஜீப்பில் திருமாவளவன் பரப்புரை செய்தார். அவருடன், காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த் உடனிருந்தார்.