திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தாங்கள் தமிழில் குடமுழுக்குகளை நடத்துவோம் என்று தெரிந்து கொண்டே தான் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்தார் என்றும், சீமானின் உபதேசத்தால் ஆட்சி நடத்தவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..