அரசியலமைப்பில் நாடாளுமன்றத்திற்குதான் உச்சபட்ச அதிகாரம் என்றும் நாடாளுமன்றத்தை தாண்டி எந்த அதிகாரமும் இல்லை என்றும், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், அரசியலமைப்பைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்க கூடாது என்று கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான், அரசியலமைப்பு என்னவாக இருக்கும் என்பதை இறுதி செய்யும் எஜமானர்கள் என்றும், அவர்களுக்கு மேல் எந்த அதிகாரமும் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.