தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைப் போல் ஒரு தற்குறி யாருமில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழ்நாட்டில் PHD படிப்பின் தரம் குறைந்துள்ளதாக ஆளுநர் பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியைப் போல் மோசமான நபரை தான் பார்த்ததில்லை என்றும், அவர் தினமும் கண்டதை உளறிவருவதாகவும் தெரிவித்தார்.